எரிமேடையில் தீக்குளித்து போலீஸ்காரர் தற்கொலை
வேலுார்: விபத்தில் மாற்றுத்திறனாளியான போலீஸ்காரர், சுடுகாட்டு எரி மேடையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். வேலுார், பொன்னி நகரை சேர்ந்தவர் வேல்முருகன், 35; வேலுார் தெற்கு காவல் நிலைய போலீஸ்காரர். இவரது மனைவி ஆஷா. தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். 2020ல் நடந்த விபத்தில் வேல்முருகன் வலது கால் உடைந்து மாற்றுத்திறனாளியானார். விபத்து ஏற்பட்ட காலில் அவருக்கு தினமும் வலி ஏற்பட்டது. இரவில் துாங்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான வேல்முருகன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து தன் மூன்று சக்கர பைக்கில் வசந்தபுரம் சுடுகாட்டு எரிமேடைக்கு சென்றார். அங்கு, தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுதும் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். நேற்று காலை அவ்வழியாக ஆடு மேய்க்க சென்றவர்கள் வேல்முருகன் எரிந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வேலுார் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.