ஜிம் உரிமையாளரை மிரட்டிய ரவுடி கைது
வேலுார்:வேலுார் கொணவட்டத்தை சேர்ந்தவர் ரசாக், 45. இவர் அப்பகுதியில் 'ஜிம்' நடத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன், வேலுாரை சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜா, 45, காட்பாடி டிரைவர் வெங்கடேசன், 34, உள்ளிட்ட ஐந்து பேர் வந்து, ரசாக்கிடம், 2 லட்சம் ரூபாய் மாமூல் தர வேண்டும். இல்லை என்றால், கொலை செய்து விடுவோம்' என மிரட்டல் விடுத்தனர்.ரசாக் புகார் படி, வேலுார் வடக்கு போலீசார், ரவுடி வசூர் ராஜா உட்பட, ஐந்து பேரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். ரவுடி வசூர் ராஜா, சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும், அவர் மீது பல்வேறு கொலை, கொலை மிரட்டல், வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.