மேலும் செய்திகள்
மதுபாட்டில், குட்கா கடத்திய இருவர் கைது
25-Oct-2025
பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி சோதனை சாவடியில் கர்நாடகாவில் இருந்து இரண்டு கார்களில் மது பாட்டில்கள் கடத்தி வருவதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், அந்த வழியாக வந்த கர்நாடகா பதிவெண் கொண்ட கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெளிமாநில மது பாட்டில்கள், குட்கா இருப்பது தெரிந்தது. விசாரணையில், இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்தவர், ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்த வெங்கட பிரசன்னா, 36,ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை கடத்தியவர் பெங்களூருவை சேர்ந்த உசேன், 34, என்பதும் தெரிந்தது. மேலும், இரண்டு கார்கள், 3,360 மது பாட்டில்கள், 65 கிலோ குட்காவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். வேலுார் எஸ்.பி., மயில்வாகனன், பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு, தலைமை காவலர் பிரபு இருவரையும் பாராட்டினார்.
25-Oct-2025