தொல்லை தந்த தொழிலாளி கைது
வேலுார்: வேலுார், சத்துவாச்சாரியை சேர்ந்தவர் மூர்த்தி, 49; கூலித்தொழிலாளி. இவர், 7 வயது மாணவிக்கு நேற்று முன்தினம் சாக்லெட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி அழுது கொண்டே பெற்றோரிடம் தெரிவித்தார். வேலுார் மகளிர் போலீசார், மூர்த்தியை போக்சோவில் கைது செய்தனர்.