உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒன்றிய பொது நிதியை பயன்படுத்த நிர்வாக அனுமதி வழங்க வேண்டும்

ஒன்றிய பொது நிதியை பயன்படுத்த நிர்வாக அனுமதி வழங்க வேண்டும்

விழுப்புரம்;அனைத்து ஒன்றியங்களிலும் பாரபட்சமின்றி பொதுநிதியைப் பயன்படுத்த நிர்வாக அனுமதி வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.தி.மு.க., மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று மாலை விழுப்புரம் கலெக்டர் மணிமேகலையைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் சேர்மன் பதவியில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் உள்ளார். அந்த ஒன்றியத்தில் மட்டும் பொதுநிதியின் கீழ் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற 21 ஒன்றியங்களில் தி.மு.க.,- பா.ம.க., மற்றும் காங்., கட்சியினர் சேர்மன்களாக இருப்பதால் ஒப்பந்தப் புள்ளி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அரசியல் காரணங்களால் ஒப்பந்தப் புள்ளி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு, டெண்டர் விடுவதற்கு நிர்வாக அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை