உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தென்னேரிகுப்பம் கிராம பொதுமக்கள் முதல்வருக்கு மனு

தென்னேரிகுப்பம் கிராம பொதுமக்கள் முதல்வருக்கு மனு

தியாகதுருகம் : பொதுமயானத்திற்கு இடம் ஒதுக்க கோரி தென்னேரிகுப்பம் பொதுமக்கள் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். தியாகதுருகம் அடுத்த தென்னேரிகுப்பம் பொதுமக்கள் சார்பில் முதல்வர் ஜெ.,வுக்கு அனுப்பியுள்ள மனு: தென்னேரிகுப்பம் கிராமத்தில் பொதுமயானத்திற்கு போதுமான இடம் இல்லை. பின்னல்வாடி செல்லும் சாலையோரம் உள்ள கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தை பொதுமயானமாக மாற்றித் தர வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டருக்கும் மனு அனுப்பியிருந்தோம். இந்நிலையில் இந்த புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவருக்கு பட்டா செய்து தர வருவாய்த்துறையினர் முயற்சித்து வருகின்றனர். இந்த இடத்தை பொது மயானமாக மாற்றிதர முதல்வர் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி