உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாரம் கிராமத்தில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுமா?

சாரம் கிராமத்தில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுமா?

திண்டிவனம் : ஒலக்கூர் ஒன்றியம் சாரம் சாஸ்திரி நகர மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒலக்கூர் ஒன்றியம் சாஸ்திரி நகரில் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஊரின் மையப் பகுதியில் குளத்தையொட்டி அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திறந்த வெளி ஊற்றுக் கிணறு உள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் நிரம்பினால் குளத்தையொட்டியுள்ள கிணறு நிரம்பும். குளத்து தண்ணீர் அருகில் உள்ள கிணற்றில் ஊற்றாக கலக்கிறது. இந்நிலையில் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் மக்கள் சாஸ்திரி நகரில் உள்ள குளக்கரையைச் சுற்றி திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் குளம் அசுத்தமடைகிறது. குளத்தின் அசுத்தமான தண்ணீரை அப்பகுதி மக்கள் குடிப்பதால் காய்ச்சல், காலரா நோய்களால் மக்கள் பாதிக்கின்றனர். குளத்தின் அருகிலுள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அருகிலுள்ள குழாய் பாதையில் தண்ணீர் திறந்து விடும் வால்வு இரண்டு அடி பள்ளத்தில் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை குளக்கரைக்கு வருவோர் கால் கழுவி அசுத்தம் செய்கின் றனர். குளம், திறந்தவெளி ஊற்றுக் கிணற்றை ஆய்வு செய்து கழிவு நீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ