உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கற்கும் பாரதம் திட்ட கருத்தாய்வுக் கூட்டம்

கற்கும் பாரதம் திட்ட கருத்தாய்வுக் கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட கற்கும் பாரதம் திட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் சி.இ.ஓ., அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர்கள் பூபதி, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். பள்ளி சாரா வயது வந்தோர் மாவட்ட கல்வி அலுவலர் வைத்தியலிங்கம் வரவேற்றார். இதில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி மாநில இயக்குனர் செந்தமிழ் செல்வி கலந்து கொண்டு கற்கும் பாராதம் திட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 22 ஒன்றியங்களைச் சேர்ந்த பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை