உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி பராமரிப்பு நிதி காசோலை வழங்கல்

பள்ளி பராமரிப்பு நிதி காசோலை வழங்கல்

சங்கராபுரம் : சங்கராபுரம் ஒன்றி யத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி பராமரிப்பு நிதிக்கான காசோலை வழங்கும் விழா வட்டார வள மைய வளாகத்தில்நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் பானுமதி தலைமை தாங்கினார். உதவி கல்வி அலுவலர் மல்லிகா முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் பிரகாஷ் வரவேற்றார். சங்கராபுரம் பகுதியில் 121 பள்ளிகளுக்கு 17 லட்சத்திற்கான காசோலையை எம்.எல்.ஏ., மோகன் வழங்கி பேசினார். ஒன்றிய செயலாளர்கள் அரசு, ராஜசேகர், பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நாராயணன், முன்னாள் பேருராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, குசேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுனர் மகேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி