உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காதல் ஜோடிகளை வெளியேற்றியதால்கோவில் ஊழியர்களுக்கு கத்திவெட்டு

காதல் ஜோடிகளை வெளியேற்றியதால்கோவில் ஊழியர்களுக்கு கத்திவெட்டு

திண்டிவனம்:கோவில் வளாகத்திற்குள் காதலர்களின் அத்துமீறிய செயல்களை கண்டித்த கோவில் பூசாரி, காவலாளிக்கு கத்திவெட்டு விழுந்தது.திண்டிவனம், திருவள்ளுவர் நகர் ஏரிக்கரை அருகே, பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் மாலை நேரங்களில், காதலர்கள் சிலர் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதை, கோவில் பூசாரி சிவகுமார் கண்டித்து, விரட்டி அனுப்பினார்.நேற்று முன்தினம் இரவு, கோவிலில் சிவகுமார், அவரது நண்பர் பூதேரி டைலர் சம்பத், கோவில் வாட்ச்மேன் கிருஷ்ணமூர்த்தி, 57, அவரது மனைவி இல்லாமல்லி, 53, ஆகியோர் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இரவு 10.30 மணிக்கு முகத்தை துணியால் மறைத்தபடி வாலிபர்கள் சிலர், கும்பலாக வந்து, கோவில் வளாகத்தில் தூங்கியவர்களை தாக்கினர்.சிவகுமார், வாட்ச்மேன் கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் கத்தி வெட்டு விழுந்தது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டிவனம் இன்ஸ்பெக்டர் அறிவானந்தன், கோவிலில் கிடந்த கத்தி, இரும்பு பைப் ஆகியவற்றை கைப்பற்றினார்.காதல்ஜோடிகளை கண்டித்ததால் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக, பூசாரி சிவகுமார், போலீசில் புகார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை