உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வின்னர் மில்க் நிறுவனத்தில் மாணவர்கள் களப்பயணம்

வின்னர் மில்க் நிறுவனத்தில் மாணவர்கள் களப்பயணம்

செஞ்சி:ஆலம்பூண்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் சத்தியமங்கலம் வின்னர் மில்க் நிறுவனத்தில் களப்பயணம் மேற்கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா சத்தியமங்கலத்தில் உள்ள வின்னர் மில்க் நிறுவனத்தில் ஆலம்பூண்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன் தலைமையில் 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் 538 மாணவர்கள் வின்னர் மில்க் நிறுவனத்தில் பால் குளிரூட்டும் பகுதியை பார்வையிட்டனர்.வின்னர் மில்க் நிறுவன ஊழியர்கள் பால் குளிரூட்டும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். வின்னர் மில்க் நிறுவனம் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் பிஸ்கெட், பால் ஆகியன வழங்கப்பட்டது.களப்பயண ஏற்பாடுகளை ஆசிரியர்கள் நடராசன், வேல்முருகன், மரியஜோசப், ரவிச்சந்திரன், கன்னியம்மாள், கலைச்செல்வி, தாமரை, பூங்குழலி, ஸ்டீபன், பூங்காவனம், தேவதாஸ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ