| ADDED : ஜூலை 13, 2011 01:00 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
விழா நடந்தது. சங்கத் தலைவர் சவுந்தர் தலைமை தாங்கினார். முன்னாள்
தலைவர்கள் முத்துகருப்பன், ராஜேந்திரன், திருப்பதி, அருணாசலம், மூர்த்தி
முன்னிலை வகித்தனர். செயலாளர் சுகுமார் வரவேற்றார்.புதிய தலைவர்
வெங்கடேசன், செயலர் அசோக்குமார், பொருளாளர் ரபீக் மற்றும் நிர்வாகிகளுக்கு
ஆளுநர் (தேர்வு) டாக்டர் பழனிவேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய
உறுப்பினர் சேர்க்கையை துணை ஆளுநர் முத்துசாமி துவக்கி வைத்தார்.போலியோ
தடுப்பு நிதியாக 61 ஆயிரம் ருபாய் வழங்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் மாநில
அளவில் இரண்டாமிடம் பெற்ற கள்ளக்குறிச்சி பாரதி பள்ளி மாணவன் வேல்முருகன்,
தாலுகா அளவில் அதிக சதவீதம் பெற்ற சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி,
பத்தாம் வகுப்பு தேர்வில் தாலுகா அளவில் அதிக மதிப்பெண் பெற்ற அரசம்பட்டு
மேல்நிலைப் பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.வள்ளலார் மன்ற தலைவர்
பால்ராஜ், ரோட்டரி அறக்கட்டளை சேர்மன் ஜனார்த்தனன் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.