உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 100 சதவீத ஓட்டளிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

100 சதவீத ஓட்டளிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டளிக்க, விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடந்தது.பேரூராட்சி சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ேஷக் லத்தீப் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பேரூராட்சி பணியாளர்கள் தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.ஊர்வலம் முடிவில் பஸ் நிலையத்தில் செல்வி கலைக் குழுவினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இளநிலை உதவியாளர் ராஜேஷ், பதிவறை எழுத்தர் சேகர், துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம், உதவியாளர் பிரபா, வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், வி.ஏ.ஓ., சீனுவாசன், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை