உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பனை மரம் விழுந்ததில் 3 மின் கம்பங்கள் சேதம்

பனை மரம் விழுந்ததில் 3 மின் கம்பங்கள் சேதம்

வானுார்: ஆரோவில் அருகே சாலையோரத்தில் இருந்த பனை மரம், விழுந்ததில் 3 மின்கம்பங்கள் சேதமடைந்தது.வானுார், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து இரும்பை, கோட்டக்கரை வழியாக ஆரோவில் பகுதிக்கு மின்கம்பி செல்கிறது. கோட்டக்கரை - ஆலங்குப்பம் மெயின் ரோடு வழியாக ஆரோவில் பகுதிக்குச் செல்லும் மின் கம்பி நேற்று திடீரென சாலையோரம் இருந்த பழமை வாய்ந்த பனை மரம் விழுந்தது.இதில், சாலையோரத்தில் இருந்த 3 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது. மின் கம்பிகள் அறுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது.மின் கம்பங்கள் முறிந்தபோது அந்த வழியாக வந்த சஞ்சீவி நகரைச் சேர்ந்த 23 வயது நபர் ஒரவர் காயமடைந்தார். உடன் அவரை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவலறிந்த ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சாலையில் விழுந்து கிடந்த மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளை ஜே.சி.பி., மூலம் அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை