உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மான் வேட்டையாடிய 3 பேர் கைது வனத்துறையினர் விசாரணை

மான் வேட்டையாடிய 3 பேர் கைது வனத்துறையினர் விசாரணை

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மானை வேட்டையாடிய மூவரை போலீசார் கைது செய்து, 12 கிலோ மான்கறி, துப்பாக்கி மற்றும் பைக்கை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை போலீசார் நேற்று காலை 11:00 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது, பரிந்தல் கிராமம் வழியாக டி.என்.14- பி-5918 பதிவெண் கொண்ட பைக்கில் நாட்டு துப்பாக்கியுடன் வந்த மூவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் எறையூர்பாளையத்தை சேர்ந்த வின்சன்பவுல்ராஜ் மகன் ஜெய்சன்,27; சின்னதம்பி மகன் அஸ்வின்சாவியா,24; வின்சன் மகன் ஜூலியன் ஜேக்கப்பீட்டர்,24; என்பதும், வரஞ்சரம் காட்டில் மானை வேட்டையாடி, கறியை எடுத்து செல்வது தெரிய வந்தது.அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் கொண்டு வந்த 12 கிலோ மான் கறி, துப்பாக்கி மற்றும் பைக்கை பறிமுதல் செய்து உளுந்துார்பேட்டை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ