உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் சட்டசபை தொகுதியில் 3ம் பாலின ஓட்டுகள் மிஸ்சிங்

வானுார் சட்டசபை தொகுதியில் 3ம் பாலின ஓட்டுகள் மிஸ்சிங்

வானுார்: வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களின் ஓட்டுகள் ஒன்று கூட பதிவாகவில்லை.விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கான தேர்தலில், மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் மூன்றாம் பாலின ஓட்டுகளை சேர்த்து 11 லட்சத்து 49 ஆயிரத்து 407 ஓட்டுகள் பதிவாகி இருந்தது.இதில், 6 சட்டசபை தொகுதிகளிலும் 220 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். இதில், திண்டிவனம் தொகுதியில் 1, விழுப்புரம் 38, விக்கிரவாண்டி 5, திருக்கோவிலுார் 16, உளுந்துார்பேட்டை தொகுதியில் 21 ஓட்டுக்கள் என மொத்தம் 81 மூன்றாம் பாலின ஓட்டுகள் பதிவாகியுள்ளன.ஆனால், வானுார் சட்டசபை தொகுதியில் உள் மொத்தம் 19 மூன்றாம் பாலின ஓட்டுகளில் ஒருவர் கூட ஓட்டுபோடவில்லை. இவர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தார்களா அல்லது வெளியூர்களுக்கு சென்றுவிட்டார்களா என்பது தெரியவில்லை. இவர்களின் ஓட்டுகள் ஒன்றுகூட பதிவாகாமல் இருப்பது வானுார் சட்டசபை தொகுதியில் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ