உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெண்ணை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் அடுத்த அயினம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மனைவி காமாட்சி,32; இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன் அதே கிராமத்தை சேர்ந்த நாவப்பன், இவர் மனைவி சவுந்தரி ஆகியோரிடம் ரூ.30 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். கடந்த 3ம் தேதி, நாவப்பன், சவுந்தரி ஆகியோர் வீட்டிற்கு சென்று காமாட்சியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு, திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். விழுப்புரம் தாலுகா போலீசார், நாவப்பன், சவுந்தரி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி