உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெயிலில் சுருண்டு விழுந்து கூலித் தொழிலாளி சாவு

வெயிலில் சுருண்டு விழுந்து கூலித் தொழிலாளி சாவு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வெயிலில் மயங்கி விழுந்து தொழிலாளி இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு, 41; கூலித் தொழிலாளி. நேற்று காலை சாப்பிடாமல் விவசாய கூலி வேலைக்கு பனையபுரம் சென்று பிற்பகல் 3:30 மணிக்கு வீடு திரும்பினார்.நடந்து வந்து கொண்டிருந்த அவர், திடீரென சாலையில் மயங்கி விழுந்து இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற விக்கிரவாண்டி போலீசார் வேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த வேலுவிற்கு இந்துமதி என்ற மனைவியும், பிரிதர்ஷினி, 6; பிரசன்னசெந்தில், 5; கவியரசு,3; என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ