| ADDED : ஆக 06, 2024 06:59 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே பட்டப்பகலில், வீடு புகுந்து நகை, பொருட்களை திருடிய வாலிபரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.திண்டிவனம் அடுத்த பாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு மகன் செல்வகுமார், 38; விவசாய கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை மனைவியுடன் பெரப்பேரி கிராமத்திற்கு சென்றிருந்தார்.அப்போது, பூட்டியிருந்த செல்வகுமார் வீட்டிலிருந்து வந்த நபரிடம் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் யார் என்று கேட்ட போது, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். மேலும், கையில் இருந்த பையை சாலையோரம் வீசிவிட்டு தப்பியோடினார்.கிராம மக்கள் அந்த நபரை விரட்டிப் பிடித்தனர். அப்போது அங்கு வந்த செல்வகுமார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, நகைகள் மற்றும் 6,000 ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து பிடிபட்ட நபருக்கு தர்ம அடி கொடுத்து வெள்ளிமேடுபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரி மகன் கார்த்திகேயன், 21; என தெரியவந்தது. மேலும் இவர் மீது சென்னை, திண்டிவனம் பகுதிகளில் பைக்குகள் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.உடன், கார்த்திகேயன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.