உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய மினி லாரி

பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கிய மினி லாரி

திண்டிவனம் : திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடாததால், மினி லாரி சிக்கி கொண்டது.திண்டிவனம் நகரப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டதற்திகாக மேன் ேஹால் அமைப்பது, பைப்புகள் புதைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, மீண்டும் மண் கொட்டி நிரப்பப்பட்டு வருகிறது.திண்டிவனம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. திண்டிவனம் காந்தி நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, மூடப்பட்டுள்ளது. இதனை சரியாக மூடாததால், நேற்று பிற்பகல் 1:30 மணியளவில், காந்தி நகருக்கு எம்.சாண்டு ஏற்றி வந்த மினி டிப்பர் லாரி, அவ்வழியாக வந்தபோது, சாலை உள்வாங்கி சிக்கி கொண்டது.இதை தொடர்ந்து டிப்பர் லாரி மூலம் சிக்கிய மினி லாரி மீட்கப்பட்டது. இதே போல் திண்டிவனம் பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட இடத்தில் சரியாக மண் கொட்டி மூடாததால், வாகனங்கள் சிக்கி கொள்வதும், அதை மீட்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை