உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து

சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து

மயிலம் : மயிலம் அருகே சின்ன நெற்குணம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் லாரி மோதியதால் அப்பகுதியில், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.மயிலம் அடுத்த சின்னநெற்குணம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று, திருப்பூரில் இருந்து சென்னைக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. அதிகாலை 5:00 மணியளவில் சின்னநெற்குணம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியனின் மீது மோதி கவிழ்ந்தது.இதில், லாரியை ஓட்டி வந்த திருப்பூர் சாரதா பள்ளி பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் மகன் கார்த்தி 23; என்பவர் படுகாயமடைந்தார்.மயிலம் போலீசார் விரைந்து சென்று, டிரைவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. விபத்து குறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ