உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அதிகார துஷ்பிரயோகம்: த.மா.கா., தலைவர் குற்றச்சாட்டு

அதிகார துஷ்பிரயோகம்: த.மா.கா., தலைவர் குற்றச்சாட்டு

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என த.மா.கா., தலைவர் வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.விழுப்புரத்தில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு மனமாற்றம் தேவை. வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமான தேர்தலாகவும், மக்கள் விரோத தி.மு.க.,விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இது அமைய வேண்டும்.இடைத்தேர்தலில் தி.மு.க.,வின் அதிகார துஷ்பிரயோகத்தை தேர்தல் ஆணையம் கண்டும்காணாமலும் உள்ளது.தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை கவலைக்கிடமாக உள்ளது. கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் பிரச்னையை தீர்க்க தகுதியற்ற அரசாக உள்ளது. அரசியல் லாபத்திற்காக நீட் விவகாரத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தி.மு.க., குழப்பிக் கொண்டுள்ளது. நீட் தேர்வை முறைப்படுத்துவது அரசின் கடமை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை