உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

திண்டிவனம், : திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு முறை தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.திண்டிவனம் அதேகொம் பெண்கள் கணிணிய மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சிவா தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மைய ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி வரவேற்றார். இதில் துணை தாசில்தார் ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் டோமினிக் சேவியர், வி.ஏ.ஓ.,க்கள் அரிராஜன், ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உளவியல் ஆலோசகர் எட்டியப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ