உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் நாகர் பள்ளி மாணவர்கள் சாதனை

சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் நாகர் பள்ளி மாணவர்கள் சாதனை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரு இடங்களை நாகர் பப்ளிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில், விழுப்புரம் நாகர் பப்ளிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் முதல் இரு இடங்களை பிடித்து சாதித்துள்ளனர். மாணவர் வேங்கடபதி வேலாயுதம் 500க்கு 491 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவி ஸ்ரீ பிரியங்கா 489 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தை பிடித்து சாதித்துள்ளனர்.மேலும், பள்ளி அளவில் பிளஸ் 2 மாணவி பிராஞ்சல் வணிகவியல் துறையில் முதலிடத்தையும், அறிவியல் துறையில் மாணவர்கள் புஷ்கரன் முதலிடத்தையும், அஜய்சங்கர் 2வது இடத்தையும், ஸ்ரீநிதி 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் 10 பேர், தமிழ், கணிதம், கணினி, உடற்கல்வி பாடங்களில் நுாறு மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கவுரவித்து பாராட்டி, வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ