உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலையோரங்களில் குப்பைகள் நகராட்சி கமிஷனர் நடவடிக்கை

சாலையோரங்களில் குப்பைகள் நகராட்சி கமிஷனர் நடவடிக்கை

திண்டிவனம், : சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகளை 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி காரணமாக உடனடியாக அகற்ற நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுத்தார். திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கும், தரம் பிரிப்பதற்கும் போதுமான இடம் இல்லாததால், திண்டிவனம் - சென்னை புறவழிச் சாலையோரம், காவேரிப்பாக்கம் ஏரி, கர்ணாவூர் பாட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது.இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றது என்பதை வலியுறுத்தி நேற்றைய 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.அதனைத் தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் தமிழ்ச்செல்வி, குப்பைகள் கொட்டப்பட்டிருந்த திண்டிவனம் - சென்னை புறவழிச்சாலை, திண்டிவனம் - மயிலம் சாலை உள்ளிட்ட இடங்களில் நேற்று பிற்பகல் நேரில் சென்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து குப்பைகளை அப்புறப்படுத்தும் தனியார் நிறுவனத்திடம், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிட உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து கமிஷனர் கூறுகையில், 'சாலையோரம் குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைகள் கொட்டுவதற்கு நகராட்சியில் இடம் பற்றாக்குறை உள்ளது.இதற்காக அய்யந்தோப்பு பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்காக தனியாக இடம் பார்த்திருக்கிறோம். அந்த இடம் குறித்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்த உடன், அய்யந்தோப்பு இடம் தேர்வு செய்யப்படும்' என்றார்.கவுன்சிலர் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ