மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
19 hour(s) ago
நாளை மின்தடை
19 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
19 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
19 hour(s) ago
விக்கிரவாண்டி: தொடர் கட்டைக் கரும்பு சாகுபடி மூலம் கூடுதல் லாபம் பெற முடியும் என கரும்பு விவசாயிகளுக்கு ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளது.முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் ஆலை கரும்பு அபிவிருத்தி பிரிவு அறிக்கை:விழுப்புரம் மாவட்டத்தில், சாகுபடி செய்யப்படும் கரும்பில், மறுதாம்பு பயிர் சாகுபடி, கரும்பு பயிருக்கான சிறப்பு அம்சமாகும். நடவு கரும்பு அறுவடைக்குப்பின் பூமிக்கு அடியில் உள்ள கரும்பு கட்டைகளில் இருந்து முளைத்து வரும் பயிரே மறுதாம்பு எனப்படும்.கட்டை கரும்பு வயல்களை முறையாக பராமரிப்பதன் மூலம் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு கட்டைக் கரும்பு சாகுபடியை மேற்கொள்ள முடியும்.கட்டை சீவுதல், கங்கு அறுத்தல், போக்கிடங்களை நிரப்புதல், நுண்ணுாட்ட கரைசல் தெளிப்பு, களை மேலாண்மை, உர மேலாண்மை போன்ற உயர் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.கட்டைக் கரும்பு சாகுபடியில் உழவு, விதை கரணை, நடவு போன்ற செலவுகள் இல்லை. இதன் மூலம் ஏக்கருக்கு 17 ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாகிறது. கட்டை கரும்பு சாகுபடிக்கு அதிகபட்சமாக 10 முதல் 14 முறை கரும்பு கட்டை விடலாம். தொடர்ச்சியாக கட்டைக் கரும்பு சாகுபடியை மேற்கொள்ளும் போது கூடுதல் வருமானம் கிடைக்கிறது.மாவட்டத்தில் சூரப்பட்டு அடுத்த அதனுார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வேல்முருகன் கடந்த 10 ஆண்டுகளாக கட்டை கரும்பு சாகுபடியில் ஏக்கருக்கு 50 டன்கள் மகசூல் பெற்று வருகிறார்.வரும் சிறப்பு பட்டத்தில் அறுவடை செய்யப்படும் அனைத்து வயல்களிலும் மறுதாம்பு கரும்பு சாகுபடி பணியை மேற்கொண்டு அதிக மகசூல் பெற்று பலன் அடையலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago