ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் நிவாரண உதவி
விழுப்புரம்: விழுப்புரத்தில், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 85வது அவதார திருநாளை முன்னிட்டு, விழுப்புரம் தெற்கு வண்டிமேடு பகுதியில் அமைந்துள்ள ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாட்டு மன்றம் சார்பில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 41 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க விழுப்புரம் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் மணிவாசகம் முன்னலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தனி தாசில்தார் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், 41 பயனாளிகளுக்கு தையல் மெஷின், லேப்டாப், சைக்கிள், கிரைண்டர் உள்ளிட்ட ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் மற்றும் 6 லட்சத்து 45 ஆயிரம் நிவாரண தொகையும் வழங்கப்பட்டது.இயக்கத்தின் தணை தலைவர்கள் பாலசுப்பரமணியன், மோகனகிருஷ்ணன், பார்த்தசாரதி, மகளிர் அணி லலிதா,வேள்வி குழு அசோக்குமார், கற்பகம் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.