உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டியில் அ.தி.மு.க.,வினரை தி.மு.க., - பா.ம.க.,வினர் மிரட்டுகின்றனர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு

விக்கிரவாண்டியில் அ.தி.மு.க.,வினரை தி.மு.க., - பா.ம.க.,வினர் மிரட்டுகின்றனர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் குற்றச்சாட்டு

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.,வினரை தி.மு.க., மற்றும் பா.ம.க.,வினர் மிரட்டுவதாக எம்.எல்.ஏ.,க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூணன் நேற்று விழுப்புரத்தில் கூறியதாவது:தி.மு.க., திருமங்கலம் இடைத்தேர்தலில் ஆட்சி அதிகாரம், பணபலம் மூலம் வென்றது. ஈரோடு இடைத்தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வாக்காளர்களை அறையில் அடைத்து அவர்களுக்கு உணவு, பணம் வழங்கி வேட்பாளர்களை சந்திக்க முடியாத நிலையை ஏற்படுத்தினர். அதே பாணியில் விக்கிரவாண்டி தொகுதியில் 33 அமைச்சர்கள் பணபலத்தோடும், ஆட்சி அதிகாரத்தோடும் இறங்கியுள்ளது.ஆசூரில், அ.தி.மு.க., கிளை செயலாளர் கண்ணன் வீட்டிற்கு சென்ற தி.மு.க.,வை சேர்ந்த கண்ணதாசன், இரட்டை இலை சின்னத்தை அழித்து விட்டு உதயசூரியன் வரைய வேண்டும் எனக்கூறி அவரை தாக்கியுள்ளார். ஆனால், கண்ணன் தாக்கியதால் கண்ணதாசன் காயமடைந்ததாக கூறி, அவர் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு நாடகமாடுகிறார். தி.மு.க.,விற்கு தேர்தல் பணியாற்றுமாறு அ.தி.மு.க.,வினரை மிரட்டுகின்றனர். அதேபோல் பா.ம.க.,வினரும் தொந்தரவு செய்கின்றனர். அனைத்து கிராமங்களிலும் இந்த நிலை தொடர்கிறது.தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி, அராஜக போக்கை கடைபிடிக்கிறது. ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லாததால், அ.தி.மு.க., இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. வரும் 2026ம் ஆண்டில் தி.மு.க., அரசை விரட்டியடித்து மீண்டும் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமையும் என்றனர்.பேட்டியின்போது நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், முத்தமிழ் செல்வன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ