உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை

ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை

வானுார் : வானுார் சட்டசபை தொகுதியில் ஓட்டுச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலோசனை நடத்தினார்.விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும், அரசு பள்ளிகளில் ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.வானுார் சட்டசபை தொகுதியில் 278 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இங்கு ஓட்டு நடக்கும் நாளில் அடிப்படை வசதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் ஓட்டுச்சாவடி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு அடிப்படை வசதிகளான மின் விளக்கு, கழிவறை வசதி, தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.அப்படி இல்லையென்றால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அப்பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.கூட்டத்தில், தாசில்தார் நாராயணமூர்த்தி, வானுார் பி.டி.ஓ., கார்த்திகேயன், கோட்டக்குப்பம் நகராட்சி கமிஷனர் புகேந்திரி, வருவாய் ஆய்வாளர்கள் லட்சுமி, வினோத்குமார், கலைவாணி, தேவசேனா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை