மேலும் செய்திகள்
ரசித்தனர்.அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
03-Mar-2025
செஞ்சி : செஞ்சியில் அ.தி.மு.க.,வினர் தங்கள் ஆட்சியின் சாதனைகளை விளக்கி பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஜெ., பேரவை நகர செயலாளர் திருமலை தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரித்விராஜ் வரவேற்றார். ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் அர்ஜூனன் எம்.எல்.ஏ., சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை கூட்ரோடு, திருவண்ணாமலை சாலை, காந்தி பஜார், பஸ் நிலையம் பகுதியில் பொது மக்களிடம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டார்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் செஞ்சி ஒன்றியம் கோவிந்தசாமி, சோழன், மேல்மலையனுார் ஒன்றியம் புண்ணியமூர்த்தி, பாலகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் அருண்தத்தன், நகர நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
03-Mar-2025