உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுச் சாவடி மையங்களுக்கு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 276 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான இரண்டாம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.தேர்தல் பொது பார்வையாளர் அமித் சிங் பன்சால் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தேர்தல் தனி தாசில்தார் கணேஷ் ஆகியோர் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 276 ஓட்டுச்சாவடிகளுக்கு 1349 கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.விக்கிரவாண்டி தொகுதியில் முன்னர் 275 ஓட்டுச் சாவடிகள் இருந்த நிலையில் வெள்ளேரிப்பட்டு சித்தேரி ஆகிய கிராமங்களுக்கு கூடுதலாக ஒரு ஓட்டு சாவடி புதியதாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை