உள்ளூர் செய்திகள்

ஆனி திருமஞ்சனம்

விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவில் நடராஜர் சன்னதியில் ஆனி திருமஞ்சன வழிபாடு நடந்தது.இக்கோவிலில் ஆண்டுதோறும் நடராஜருக்கு 6 முறை திருமஞ்சனம் வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று, ஆனி திருமஞ்சனம் வழிபாடு நடந்தது. காலை 9:30 மணிக்கு நடராஜருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, பகல் 11:30 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு, மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து மகா தீபாரதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ