மேலும் செய்திகள்
சமுதாய அமைப்பாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
20-Aug-2024
விழுப்புரம் : தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் உள்ள பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர், 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவராகவும், கணினி இயக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.தகவல் தொடர்பு திறன் மிக்கவராகவும், அரசு திட்டங்களில் குறைந்தபட்சம் ஓராண்டு முன் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். பகுதியளவிலான கூட்டமைப்பு உறுப்பினராக அவசியம் இருக்க வேண்டும். அந்த கூட்டமைப்பில் இருந்து பரிந்துரை கடிதம் அல்லது தீர்மான நகல் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.விண்ணப்பிப்போர் சார்ந்துள்ள பகுதியளவிலான கூட்டமைப்பு துவங்கி 2 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் புதுவாழ்வு திட்டத்தில் நிர்வாகம் அல்லது நிதி முறைகேட்டால் நிறுத்தப்பட்டவராகவோ, நீக்கம் செய்தவராகவோ இருத்தல் கூடாது.இந்த தகுதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 10ம் தேதி மாலை 5:00 மணிக்குள் நகர்ப்புற வாழ்வாதார மையம், மருத்துவமனை வீதி, விழுப்புரம் புதிய நகராட்சி அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ பணி நியமனம் கோரும் விண்ணப்பத்தை சுயவிபரம் கொண்ட அனைத்து ஆவண நகல்களோடு சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
20-Aug-2024