| ADDED : ஆக 12, 2024 06:19 AM
விழுப்புரம்: மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 13 ஒன்றியங்களில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகிற்கு கூடுதலாக 13 வட்டார வள பயிற்றுநர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:வட்டார வள பயிற்றுநர் பணிக்கு, பெண் சுயஉதவிக்குழு உறுப்பினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்புகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.தமிழ், ஆங்கிலத்தில் நன்றாக எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வலுவான தகவல் தொடர்பு திறன், தனிப்பட்ட திறன்களோடு இருக்க வேண்டும். கணினியில் விருப்பத்தக்க அறிவு பெற்றிருப்பதோடு, வயது வரம்பு கடந்த மார்ச் 1ம் தேதியன்று 25 முதல் 45 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும்.பயிற்சி ஊதியம் நாள் ஒன்றுக்கு பயண படியோடு சேர்த்து 750 ரூபாய் வழங்கப்படுகிறது. தகுதியுடையோர், திட்ட இயக்குனர், மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கட்டடம், கலெக்டர் பெருந்திட்ட வளாகம் (மாவட்ட பதிவாளர் அலுவலகம் எதிரே), விழுப்புரம் 605602 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பலாம். அல்லது காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நேரிலும் வரும் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.