உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிக்கு பாராட்டு விழா

விவசாயிக்கு பாராட்டு விழா

விக்கிரவாண்டி, : கரும்பு சாகுபடியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற விவசாயிக்கு ஆலை சார்பில் பாராட்டு விழா நடந்தது.முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை எல்லைக்குட்பட்ட தென்னவராயன்பட்டைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ராஜலட்சுமி மூர்த்தி, தனது நிலத்தில் கோ 86032 ரக கரும்பு சாகுபடி செய்திருந்தார்.இவர் 2023-24ம் ஆண்டிற்கான தமிழக அளவிலான கரும்பு மகசூல் போட்டியில் ஏக்கருக்கு 117 டன் மகசூல் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.நேற்று கரும்பு மண்டபத்தில் நடந்த பாராட்டு விழாவிற்கு, பொது மேலாளர் விஜயகுமார் வரவேற்றார். சர்க்கரை ஆலை தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி முதலிடம் பெற்ற விவசாயி ராஜலட்சுமி மூர்த்திக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.வேளாண் உதவி இயக்குனர் கங்கா கவுரி, கரும்பு ஆராய்சி மற்றும் விரிவாக்க தலைவர் ஜெயராம், பொது மேலாளர் (இயக்கம்) மனோகரன், உதவி பொது மேலாளர் சிவாஜி, கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வழக்கறிஞர் பாண்டியன் உட்பட ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலையின் செஞ்சி, செம்மேடு, முண்டியம்பாக்கம் ஆலைக்குட்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி