மேலும் செய்திகள்
நாளை மின்தடை
5 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
5 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
5 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
5 hour(s) ago
விழுப்புரம் : சுபமுகூர்த்த நாளையொட்டி, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்றும், நாளையும் 450 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக அலுவலக செய்திக்குறிப்பு:இன்று 3ம் தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான இன்று மற்றும் நாளை 4ம் தேதி மக்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிகளவில் பயணிப்பர்.இதையொட்டி, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக இன்று 200 சிறப்பு பஸ்களும், நாளை 250 உட்பட மொத்தம் 450 சிறப்பு பஸ்களை இந்த வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பயணிகள் https://www.tnstc.inஎன்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம்.பயணிகளின் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை ஏற்பாடு செய்யவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்யவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago