உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கடையில் ரகளை வாலிபர் கைது

கடையில் ரகளை வாலிபர் கைது

விழுப்புரம், : விழுப்புரம் கந்தசாமி லே அவுட்டைச் சேர்ந்தவர் விக்ரம். இவர், கே.கே., ரோட்டில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடைக்கு குடிபோதையில் வந்த வாலிபர், விக்ரமிடம் தகராறு செய்து கடையின் முன்பக்க கண்ணாடி கதவை கல் வீசி சேதப்படுத்தினார்.பின்னர், கடை உள்ளே பெட்ரோலை ஊற்றி விட்டு தப்பிச்சென்றார்.இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார், கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில் கிடைத்த தகவலின்படி கடையில் தாக்குதல் நடத்திய விழுப்புரம் கே.கே.ரோடு, அண்ணா நகரைச் சேர்ந்த கவுதம், 19; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி