| ADDED : ஆக 08, 2024 12:24 AM
வானுார் : துருவை கிராமத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்.எல்.ஏ.,சக்ரபாணி பரிசுகளை வழங்கினார்.வானுார் அடுத்த துருவை கிரிக்கெட் கிளப் சார்பில், பல்வேறு அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி அப்பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், 32 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப்போட்டியில் ராயப்புதுப்பாக்கம் அணியும், புளிச்சப்பள்ளம் அணியும் விளையாடின. இதில் ராயப்புதுப்பாக்கம் அணி முதலிடத்தையும், புளிச்சப்பள்ளம் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. மூன்றாம் இடத்தை துருவை கிரிக்கெட் அணி பிடித்தது.இதற்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக சக்ரபாணி எம்.எல்.ஏ., பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார். இதில் முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம் மற்றும் சுழற்கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வானுார் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் சதீஷ்குமார், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், பாரதி, துருவை அணி கேப்டன் குமார், பாவேந்தர் ஆங்கிலப் பள்ளி தாளாளர் மணிபாலன், துருவை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா சதீஷ் குமார், ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகி மணிபாலன், துணைத்தலைவர் லலிதா சேகர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.