உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மூங்கில்பட்டில் தேர்த்திருவிழா

மூங்கில்பட்டில் தேர்த்திருவிழா

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி அருகே மூங்கில்பட்டில் செங்கழுநீர் அம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது.இக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் இரவு சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பால் அபிேஷகம் நடந்தது. பிற்பகல் 2:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ