பா.ம.க., - வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை
விழுப்புரம் : விழுப்புரத்தில் மத்திய மாவட்ட பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலசக்தி வரவேற்றார். மாவட்ட தலைவர் தங்கஜோதி, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி சிறப்புரையாற்றினார்.வன்னியர் சங்க மாவட்ட தலைவர் தமிழழகன், செயலாளர் குமரகுருபரன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், தமிழகத்தில் தியாகிகளின் தினத்தை முன்னிட்டு, இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தவர்களுக்கு பா.ம.க., சார்பில் வரும் செப்டம்பர் 17ம் தேதி சித்தணி, பாப்பனப்பட்டு, பனையபுரம், கோலியனுார், கொள்ளுகாரன்குட்டை ஆகிய இடங்களில் உள்ள தியாகிகள் நினைவு துண்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் மற்றும் கட்சியினர் திரளாக பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.