உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வங்கி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி அருகில் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதிகாரிகள் சங்க பொறுப்பாளர் இள வழகன் தலைமை தாங்கினார். வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் அமீர்பாஷா, அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் சீனிவாசன், உதவி செயலாளர் லாசர், அரசுப் பணியாளர் சங்க முன்னாள் மாநில தலைவர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், அனைத்து வங்கிகளிலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். வங்கிகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். வங்கி அதிகாரிகள், ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.வங்கி ஊழியர் சங்க நகர பொதுச் செயலாளர் நாராயணசாமி, தலைவர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை