மேலும் செய்திகள்
நாளை மின்தடை
11 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
11 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
11 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
11 hour(s) ago
விழுப்புரம் : விழுப்புரத்தில் வங்கி ஏ.டி.எம்., இல் பணத்தை நிரப்பாமல் ரூ.85.38 லட்சத்தை கையாடல் செய்த உதவி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திரா மாநிலம், கொலமூடி, எருக்குலபாலம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் ரகு,33; இவர், விழுப்புரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு பரிவர்த்தனைகளை கவனித்து வந்த இவர், ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பும் பணியையும் செய்து வந்தார்.ஆனால், ஏ.டி.எம்.,மில் பணத்தை சரியாக நிரப்பாமல் ஒவ்வொரு முறையும், சிறிது, சிறிதாக கையாடல் செய்து வங்கி நிர்வாகத்திற்கு தவறான தகவல்களை அளித்து மறைத்து வந்துள்ளார்.சில தினங்களுக்கு முன் உயர் அதிகாரிகள் தணிக்கை செய்தபோது, ரகு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் முதல் தற்போது வரை 85 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்தது. விசாரணையில், பணத்தை கையாடல் செய்ததை ரகு ஒப்புக் கொண்டார்.இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் ஜெயபாலாஜி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, சென்னை, ஆவடியில் இருந்த ரகுவை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago