உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்குகள் மோதல் ஒருவர் பலி

பைக்குகள் மோதல் ஒருவர் பலி

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.விழுப்புரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷணன், 60; இவர், கடந்த 7ம் தேதி, தனது பைக்கில் சிறுவந்தாட்டில் இருந்து, மடுகரை நோக்கிச் சென்றார். அங்குள்ள காளி கோவில் அருகே சென்றபோது எதிரே குமாரகுப்பம் பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் திருப்பதி, 21; என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியதில், கிருஷணன் படுகாயமடைந்தார்.உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ