உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

விழுப்புரம்: காணை அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் எடிசன், 28; கூலித் தொழிலாளி. இவர், நேற்று தனது பைக்கில் திருக்கோவிலுாரில் இருந்து விழுப்புரம் நோக்கி காணை அடுத்த சென்னாகுனம் கிராம சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நிலைதடுமாறி சாலையோர மரத்தின் மீது மோதி விழுந்தார். பலத்த காயமடைந்த எடிசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ