உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாய்ப்பால் வார விழா

தாய்ப்பால் வார விழா

திண்டிவனம்: திண்டிவனம் ஜெயபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா நடந்தது.திண்டிவனம் ேஹாஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு சங்க தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமார் வரவேற்றார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் காயத்ரி தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும், டாக்டர் அமுதாம்பிகை, பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் குழந்தை வளர்ப்பு பற்றியும் சிறப்புரையாற்றினர்.விழாவில் பங்கேற்ற கர்ப்பிணி மற்றும் குழந்தைபேறு பெற்றவர்களுக்கு ஊட்டசத்து பொருட்கள் வழங்கப்பட்டது.விழாவில் டாக்டர் சண்முகசுந்தரம், பிரபாகரன், கார்த்திக்கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ