உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நண்பரை தாக்கிய சகோதரர்கள் கைது

நண்பரை தாக்கிய சகோதரர்கள் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடன் வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபரைத் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த அத்தியூர்திருவாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 40; இவர், விழுப்புரம் அடுத்த கொளத்துாரைச் சேர்ந்தவர்கள் வாசுதேவன் மகன்கள் விக்னேஷ், 27; விஜி, 24; இவர்களிடம் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி, 35 ஆயிரம் ரூபாயை கடந்த 2 மாதத்திற்கு முன் சங்கர் வாங்கியுள்ளார்.ஆனால், குறிப்பிட்டபடி கடன் வாங்கித் தராததால், ஆத்திரமடைந்த விக்னேஷ், விஜி ஆகியோர், நேற்று முன்தினம் விழுப்புரம் தந்தை பெரியார் நகர் அருகே சங்கரை வழிமறித்து தாக்கினர். இதனால் காயமடைந்த சங்கர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சங்கர் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், விக்னேஷ், விஜி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை