உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டு எண்ணும் மையத்தில் கூடுதலாக சி.சி.டி.வி., பொருத்த கோரி வேட்பாளர் மனு

ஓட்டு எண்ணும் மையத்தில் கூடுதலாக சி.சி.டி.வி., பொருத்த கோரி வேட்பாளர் மனு

விழுப்புரம், : விழுப்புரம் லோக்சபா தொகுதி ஓட்டுகள் எண்ணும் மையத்தில் கூடுதலாக சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தக் கோரி, அ.தி.மு.க., வேட்பாளர் தேர்தல் அலுவலரிடம் மனு அளித்தார்.விழுப்புரம் லோக்சபா தொகுதி தேர்தலில் பதிவாகிய ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கீழ்பெரும்பாக்கம் அரசு கலை கல்லுாரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் 30 நிமிடங்கள் சி.சி.டி.வி., கேமராக்கள், யு.பி.எஸ்., கருவியில் மின்சாதன பழுது ஏற்பட்டுள்ளது. இந்த கருவியில், பழுது மற்றும் மின்தடை பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வி.சி., வேட்பாளர் ரவிக்குமார், மாவட்ட தேர்தல் அதிகாரி பழனியிடம் மனு அளித்துள்ளார். இதையடுத்து, அ.தி.மு.க., வேட்பாளர் பாக்கியராஜ், அர்ஜூனன் எம்.எல்.ஏ., ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனியிடம் நேற்று ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஓட்டு எண்ணும் மையத்தில் கூடுதலாக சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும். மின்சார பழுது ஏற்படாத வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி