உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்

விக்கிரவாண்டி: தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த முடியாது என மற்றவர்கள் கூறிய நிலையில் அதை செயல்படுத்தி காட்டியவர் முதல்வர் ஸ்டாலின் என அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம் தி.மு.க., சார்பில் பாப்பனப்பட்டு , முண்டியம்பாக்கம், ஒரத்துார் , கஸ்பாகாரணை ,தும்பூர், கொட்டியாம் பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார்.தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது.தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிர் நலம் காக்க மகளிர் உரிமைத் தொகை, இலவச பயணம், புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த முடியாது என மற்ற கட்சிகள் கூறிய நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை வழங்கி வருகின்றார்.விக்கிரவாண்டி தொகுதிக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்று உள்ளது. அரசின் திட்டங்கள் தொடர இத்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.அமைச்சர்கள் சிவசங்கர், ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்டபொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ்,ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, ஒன்றிய செயலாளர் ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி, செல்வம், சாவித்திரி, முன்னாள் கவுன்சிலர் அசோக் குமார், ஒன்றிய தலைவர் முரளி, மாவட்ட பிரதிநிதி வேல் முருகன் நிர்வாகிகள் சங்கர், ராம்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ