உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாதாள சாக்கடையில் அடைப்பு; கழிவுநீர் வெளியேறி மக்கள் அவதி

பாதாள சாக்கடையில் அடைப்பு; கழிவுநீர் வெளியேறி மக்கள் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் கேசவன் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது.விழுப்புரம், கிழக்கு பாண்டி ரோட்டில் எல்.ஐ.சி., அலுவலகம் அருகே உள்ள கேசவன் தெருவில், 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள பாதாள சாக்கடையில், சில தினங்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டு, மேன்ேஹால் வழியாக கழிவுநீர் வெளியேறியது.அடைப்பை சீரமைக்காததால் தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.பொதுமக்களின் நலன் கருதி பாதாள சாக்கடை அடைப்பு சரி செய்யும் நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் துரிதமாக ஈடுபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை