உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சி.எம்.எஸ்., ஊழியர்களுக்கு பிரிவு உபசார விழா

சி.எம்.எஸ்., ஊழியர்களுக்கு பிரிவு உபசார விழா

திண்டிவனம்: திண்டிவனம் சி.எம்.எஸ்.அலுவலகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.திண்டிவனம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின்(சி.எம்.எஸ்.,) வளாகத்தில் பணியாற்றிய பொது மேலாளர் குமார் மற்றும் விற்பனையாளர் சேகர் ஆகியோருக்கு பிரிவு உபசார விழா நடந்தது. விழாவில், சி.எம்.எஸ்.,மேலாண்மை இயக்குனர் வீர செல்வம் உள்ளிட்ட ஊழியர்கள் பணி ஓய்வு பெறுவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு சி.எம்.எஸ்., சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ